Posts

Showing posts from November, 2019

இந்த உலகம் நன்மையானதா? தீமையானதா? - மகாபாரத கதைகள்

இந்த உலகம் நன்மையானதா? தீமையானதா? தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். மனம் தூய்மையானால்இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர். உடனே, ”ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு சோதனை!” என்றார் கிருஷ்ணர். இருவரும், ‘என்ன அது?’ என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர். முதலில் தருமரிடம், ”தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!” என்றார் பகவான். ”ஆகட்டும் கிருஷ்ணா!” என்ற தருமர் அங்கிருந்து புறப்பட்டார். அடுத்து, துரியோதனனிடமும் அதே விஷயத்தைக் கூறி அனுப்பி வைத்தார் பரந்தாமன். சில நாட்கள் கழித்து இருவர் மட்டும் தனித்துத் திரும்பி வந்தனர். அவர்களிடம் கிருஷ்ணர் கேட்டார்: ”என்னாயிற்று… நான் குறிப்பிட்ட நபர்களை அழைத்து வரவில்லையா?” உடனே துரிய...

நீதிவேந்தன் கதை - விக்ரமாதித்தன் கதைகள்!

*நீதிவேந்தன் கதை* இமயமலையின் தெற்குச் சரிவுப் பகுதியில் விந்தியஸதி என்னும் நகரத்தை ஸீவிசாரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதிநெறி தவறாதவன். அவனுடைய மகன் இளவரசன் ஜயகோனன். ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். யானை ஒன்றைக் கண்டு அதன் பின்னே சென்றான். போன வழியில் அழகிய நதியைக் கண்டான். அதன் ஒரு பக்கத்தில் வயதான அந்தணர் ஒருவர் ஜபம் செய்து கொண்டிருந்தார். ஜயகோனுக்குத் தாகம் எடுத்தது. எனவே ஆற்றில் இறங்கலாம் என்று முடிவெடுத்தான். அந்த வயதான அந்தணரிடம்"குதிரையைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அவரை ஜபம் செய்து கொண்டிருப்பதிலிருந்து எழுப்பினான்.  ஜபம் செய்வதிலிருந்து எழுப்பியதால் கோபமுற்ற அந்தணன், " நான் என்ன வேலைக்காரனா? என் ஜபத்தைக் கெடுத்து விட்டாயே!" என்று கத்தினான் -  இதனால் ஜயகோனனும் கோபமடைந்து அந்த அந்தணனைக் குதிரையின் சாட்டையால் அடித்து விட்டான். அந்த அந்தணன் நேரே அரண்மனைக்கு வந்தான். தனக்கு நேர்ந்ததை அங்கு முறையிட்டான். மன்னனுக்குச் சினம் வந்தது. இளவரசன் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நினைப்பதா? அரசன் ஸீவிசாரன் நீதி தவறாத வேந்தன். உடனே ஆண...

மகாபாரத போர் - Highlights & A walk in.

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தேன்.  கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா? பல்வேறு சந்தேகங்கள் எனக்குள் எழுந்தன. அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், "உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே" என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினேன். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. "குருஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ள முடியாது." "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?" - சற்றே குழப்பத்துடன் கேட்டேன். *"மகாபாரதம் ஒரு இதிகாசம் ஒரு மாபெரும் காவியம்.* *அது உண்மை என்பத...

பகீரத ப்ரயத்தனம்! தமிழ் கதை.

பகீரதன் தீரன். பாவம்... அவனுக்குத குழந்தை பேறு வாய்க்கவில்லை. குலம் தழைக்க,  மூதாதையர் சாபம் போக்கி நற்கதி அடைய வைக்க முடிவு தவத்தின் மூலம் ப்ரம்மனை அசைக்க முடிவு பண்ணி, நாட்டை மந்திரிகளின் வசம் ஒப்புவித்து, இமய மலைக்கு சென்று, நாற்புறமும் தீமூட்டி ஒற்றை காலில்  நின்று,  மாதம் ஒரு முறையே உணவருந்தி கடும்தவம் புரிகிறான்.  தவத்தின் உக்கிரத்தில் ப்ரஸன்னமான ப்ரஜாபதி ப்ரம்மன் அவன் தவத்தை மெச்சி, முன் தோன்றி "என்ன வரங்கள் வேண்டும்" என கேட்க, "என் குலம் முடிந்து போகாமல் இருக்க எனக்கு சந்ததியையும், என் முன்னோர்கள் நற்கதி அடைய கங்கை புவிக்கு இறங்கியும் வர வேண்டும்" என பகீரதன் வேண்டுகிறான். படைக்கும் தெய்வம் அருளிய வாக்கு.. "முதலாவது சீக்கிரம் நடக்கும்.  இரண்டாவது.. கங்கை புவிக்கு இறங்கும் அசுர வேகத்தை தாக்கு பிடிக்க வல்லவர் பரமேஸ்வரன் ஒருவரே.  ஈசனை சரண் புகு." என கூறி மறைகிறார். பகீரதன் ப்ரமனின் அறிவுரை ஏற்று மீண்டும் வெயில், பனி, மழை பார்க்காமல், பகல் இரவென்று பார்க்காமல் அன்ன ஆகாரமின்றி  ஈசனை நோக்கி தவபுரிகிறான். (நம்மூர் வெயில்,மழை பனி மாதிரி இல்லை அங்கே. பின...

மோக்க்ஷம்!

அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு, "ரங்கநாதா! எனக்கு மோக்ஷம் கொடேன்" என்று கேட்கிறார்! அந்த ரங்கநாதனும் அவரோடு பேசுகிறான். "பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே.. உனக்கு என்ன இன்றைய தினம் மோக்ஷத்திலே அதிக ருசி.."? "இன்றைக்கே போக வேண்டும் போலிருக்கிறதே சுவாமி" என்கிறார் அவர். "அப்படியானால், நீர் என்ன கர்மயோகம் பண்ணியிருக்கிறீரா"? "தெரியாது" "ஞானயோகம் பண்ணியிருக்கிறீரோ"? "அறவே ஞான சூன்யம் நான்" "பக்தி யோகம் பண்ணியிருக்கிறீரா"? "அந்தப் பக்கமே போனதில்லை" "சரணாகதி பண்ணியிருக்கிறீரா"? "தெரியாதே" "இதெல்லாம் எப்படியாவது போகட்டும். என் பக்தனுக்கு ஒரு நாளாவது அன்னமிட்டிருக்கிறீரா"? "இல்லையே" "என் பக்தன் தங்க இடம் கொடுத்திருக்கிறீரா"? "இல்லை" "எதற்கெடுத்தாலும் இல்லையே, இல்லையே என்கிறீரே"? என்று ரங்கநாதனுக்கு கோபம் வந்ததாம். படுத்துக் கொண்டிருந்த பெருமாள் எழுந்து உட்கார்ந்தார். அப்படி ரங்கநாதர் உட்கார்ந்த கோலத்தில் சேவித்தவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்...

பத்மாவதி கதை - விக்கிரமாதித்தன் கதைகள்!

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்* *பத்மாவதி கதை* வற்றாத கங்கை நதியோடும் வாரணாசி நகரை பிரதாபமகுடன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.  அவனுடைய மகன் வஜ்ரமகுடன். வாரணாசியின் இளவரசன். மந்திரி குமாரன் புத்திசரீரன் வஜ்ர மகுடனின் நெருங்கிய நண்பன். இளவரசன் அழகன், வீரன். புத்தி சரீரன் பெயருக்கேற்ப உடம்பெல்லாம் மூளை!  இருவரும் ஒரு நாள் அருகில் உள்ள கானகத்தில் வேட்டையாடச் சென்றனர். வழியெங்கும் தென்பட்ட சிறு சிறு விலங்குகளை வேட்டையாடிபடி காட்டினுள் வந்துவிட்டனர். உச்சிப் பொழுதாகிடவே தாகமெடுத்தது.  "புத்தி சரீரா நீர்நிலை ஏதாவது அருகில் இருக்கிறதா பார்." "இளவரசே, அதோ அந்தப் பக்கத்தில் மேலே நீர்ப்பறவைகள் பறக்கின்றன. அங்கிருந்து வீசும் காற்று குளுமையாக இருக்கிறது. அங்கு நீர் நிலை ஏதாவது இருக்கவேண்டும். போகலாம் வாருங்கள்." நெருங்கும் போது காற்று மேலும் குளுமை அடைந்தது. பறவைகளின் சேர்ந்திசை இருவரையும் வரவேற்றது. மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியில் அழகான தடாகம் ஒன்று இருந்தது. ஆனால் இருவரும் உள்ளே இறங்கிவிடவில்லை. காரணம் தேவமங்கயரை ஒத்த இளம் பெண்கள் நால்வர் நீராடிக் கொண்டிருந்த...

கடவுளின் அன்பு! குட்டிக்கதை.

ஒருமுறை, நாரதர் விஷ்ணுவிடம், ஐயனே! நீங்கள் துயில் கொள்ளும் சாதாரண பாம்பான ஆதிசேசனை கிருஷ்ண அவதாரத்தில் உங்கள் அண்ணனாக பிறக்க செய்து, அவர் கால்பிடித்து, கைப்பிடித்து பலவாறாக சேவை செய்த காரணமென்ன என கேட்டார்.   நாரதா! ஒருமுறை என் காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்கு கிடைத்தது 14 வருட அரச யோகம். ஒரே முறை என் காலில் பட்டதன் விளைவு கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. ஆனால், சதா சர்வக்காலமும் ராம அவதாரத்தில் அண்ணாவென என் காலடியில் கிடந்த லட்சுமணனுக்கு நான் எதுவுமே செய்யவில்லையே. அதனால்தான், லட்சுமணனாய் அவதரித்த ஆதிசேசனை பலராமனாய் பிறக்க செய்து அவன் கால்பிடித்தேன் என பதிலுரைத்தார்.

மந்தாரவதி கதை - விக்கிரமாதித்தன் கதைகள்!

இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் பேசத் தொடங்கியது.  "பராக்கிரமசாலியான விக்கிரமாதித்த இந்த இருண்ட பொழுதில் உனது நடைப் பயணம் களைப்பாகாமல் இருக்க கதை சொல்லுகிறேன். கேள்.” அக்னிஸ்வாமி என்ற அந்தணன் பிரம்மஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். யமுனை ஆற்றங்கரையில் உள்ள அழகான ஊர் அது. வேதம் படித்தவன், ஊரில் நல்ல பெயர் எடுத்தவனாகையால் வாழ்க்கை சுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த அழகுடைய மந்தாரவதி என்ற மகள் இருந்தாள். பல பேர் அவளை மணக்க முன் வந்தும் அக்னிஸ்வாமி அவர்களுள் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்தான். அந்த மூன்று பிராமண இளைஞர்களும் வேத விற்பன்னர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தனர். மூவரில் யாரை மருமகனாகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியவில்லை. மூவருமே தனித்தனியே மந்தாரவதியைப் பார்த்தார்கள். மூவருமே தனக்குத்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அக்னிஸ்வாமியாலும...

மகாபாரத கதைகள் - நமது ஆர்வம் - நம் முதல் குரு!

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தானே பயிற்சி கொடுக்கிறீர்கள் என்று வினவினார். அதற்கு துரோணர், ஆம் மன்னா என்று பதிலளித்தார். தன் சீடர்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி பயிற்சி அளிப்பதே ஒரு நல்ல ஆசானுக்கு அழகு. நீங்கள் ஒரு நல்ல ஆசானாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார் திருதிராஷ்டிரர். அவர் பேச்சில் ஏதோ ஒளிந்துள்ளது என்பதை அறிந்த துரோணர். கௌரவர்கள் தன்னை பற்றி தன் தந்தையிடம் ஏதோ குறை கூறி இருக்கிறார்கள் என்பதை யூகித்துக்கொண்டார். மன்னா நான் அனைவரையும் சமமாக தான் நடத்துகிறேன் ஆனால் அவரவரின் தனிப்பட்ட முயற்சி மற்றும் ஆர்வத்தை பொறுத்தே ஒவ்வொருவரும் பாடத்தை கற்கின்றனர் என்றார் துரோணர். அதன் பின் மன்னரிடம் விடை பெற்று தன் குடிலிற்கு திரும்பினார்.  அடுத்த நாள் எப்போதும் போல அனைவருக்கும் பயிற்சி தொடங்கியது. இன்று கௌரவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அணைவரையும் ஒரு காட்டிற்கு கூ...

ஸ்ரீவிஷ்ணு திருவிளையாடல் - 3 - ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.

மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.  இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு,  ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார். திருவிசலூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர்.  அப்போது, அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர்;  கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.  ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள்.  அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக, கண்ணன் காத்திருக்கவில்லை.  உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க முடியாது... என்றனர்.  ஸ்ரீஐயாவாளோ அமைதியாக, என் பக்தியை பற்றி கண்ணனுக்கு தெரியும்... என்று கூறி, வீட்டினுள் சென்று விட்டார்.  ஊர்வலக்காரர்களோ, உங்களுக்கு பக்தி இருந்தால், எங்கே கண்ணனைக் கூப்பிடுங்...

உண்மையான பக்தன்!

உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள். ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் ‘கிருஷ்ணாவதாரம்’ பற்றி தாம் செய்த உபன்யாசத்தில், கிருஷ்ணன் சலவைத் தொழிலாளியிடம் சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார்! அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, “கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன்” எனக் கூறினான். “அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர்! அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார். ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், “நீங்க தான் என்னைப் பாராட்டறீங்க… ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே” என்றான். அது கேட்ட ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, “உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்...

தன் மகனால் மாண்ட அர்ஜுனன்!

தன் மகன் பப்ருவாகனனால் யுத்தக் களத்தில் வீழ்த்தப்பட்டு உயிரிழந்த அர்ஜுனன் மறுபடியும் உயிருடன் மீண்டதன் பின்னணியை விவரிக்கும் நிகழ்ச்சி இது... குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று, தர்மபுத்திரர்ச க்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார். அதன் பொருட்டு கண்ணனின் ஆணைப்படி அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார். யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார். வியாசர் வழிகாட்டியபடி, சித்ரா பௌர்ணமியன்று தர்மபுத்திரருக்கு முறைப்படி, யாக தீட்சை கொடுக்கப்பட்டது. பின்னர், உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் தர்மபுத்திரர். பாதுகாப்பாக அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள், வில், எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான். சென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கண்ணனின் அருளுக்குப் பாத்திரமான தர்மபுத்திரரின் யாகக் குதிரையை யாரால் எதிர்த்து நிற்க முடியும்? அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி ம...

கடவுளா கொக்கா! - தமிழ் கதைகள்

கடவுளோடு பேசிக்கொண்டிருந்த மனிதன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்,  `சாமி உங்களுக்கு ஒரு கோடி வருஷங்கறது  எவ்வளவு நேரம்?'  அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே,  'ஒரு கோடி வருஷங்கிறது எனக்கு ஒரு நிமிஷம்' என்றாராம்.  இதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன், 'அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி?'என்று கேட்க, 'ஒரு ரூபாய் போல' என்றாராம் கடவுள்.  உடனே கடவுளை மடக்க நினைத்த மனிதன்,  'சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்' என்றானாம் ரொம்ப அடக்கமாக .. கடவுள் மென்மையாகச் சிரித்துக்கொண்டே,  'ஒரு நிமிஷம் பொறு'...!என்றாராம்.

சிவபெருமான் திருவிளையாடல்- 11-

ஈசனின் 64 சிவ மூர்த்தங்களில் 16 வது சிவ மூர்த்தம் சண்ட தாண்டவ மூர்த்தி *************************** திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர் அங்கு தாண்டவ நடத்தைக் காட்ட வேண்டிய தவமியற்றினார்.  அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள பாம்பு அவரது திருவிரலில் விஷம் கக்கியது.  இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்குமாறு கார்கோடகனிடம் கூறியது.  கார்கோடகனும் பயந்து சிவனிடம் முறையிட்டது. உடன் சிவபெருமான் திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்டதாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார்.  திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள்.  இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும் சப்தமாதர்கள், சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் கொன்றனர்.  அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன். அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அதுவொரு இரத்தபீசனாக மாற...

அறிவு Vs ஞானம் - எது உங்களிடம் இருக்கிறது? - தமிழ் கதைகள்

பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. " #அறிவு என்றால் என்ன? #ஞானம் என்பது எது? " என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு #ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, "நான்போய் வந்த அறையினுள் #மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா''# என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது. #தங்கத்தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்., அடுத்து இரண்ட...

பகிர்தல் நன்று! - குழந்தைகள் நீதிக்கதைகள்.

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்…. அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை! எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர். பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர். பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமி...

அரசு பகுத்தறிவு சங்கம்! - சுஜாதா

சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள். உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள். – திருவாய்மொழி_ ஶ்ரீரங்கத்தில் அவ்வப்போது வைணவத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் எதிர்ப்புக்குரல்கள் எழும். நாங்கள் – கீழச்சித்திரை வீதிக்காரர்கள் – அதைக் கண்டுகொள்ளாமல் தமாஷாகத்தான் எடுத்துக்கொள்வோம்… சின்னக்கடைவீதி மூலையில் இருந்த கரீம்பாய் கடையில் பழைய புத்தகங்கள் வாங்கச் அடிக்கடி செல்வேன். (வீரமாமுனிவரின் ‘சதுரகராதி’ பழைய பதிப்பு அங்கேதான் கிடைத்தது). அப்போது பகுத்தறிவு கருத்துகள் ஒலிபெருக்கியில் காதில் விழும். திராவிடக் கழகத்தைச் சார்ந்த பண்ணனார் என்பவர் சித்திரை வீதியில் வீடு வாங்கிக்கொண்டு பால் சப்ளை செய்தார். பால் வியாபாரத்தையும் பார்ப்பன வெறுப்பையும் கலக்கவில்லை. பார்ப்பன எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அடிக்கடி தலைமை தாங்குவார். அவர் மனைவி பாட்டியுடன் தினம் ராத்திரி நிலவொளியில் பேச வருவாள். “என்னடி… உன் புருஷன் பெருமாளே இல்லைங்கறானாமே?” “அது ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கும்” “பெருமாள் எப்டிரி, இலைலைன்னு சொல்லப்போகும்… ஒருநா அவனைக் கேட்டுச் சொல்லேன்… நீதான் கேளேண்டா...

ஜென் கதைகள் - உண்மையான அன்பு எது?

ஜென் குருவும் அவரது சீடனும் ஒரு குளக்கரையில் அமர்ந்திருந்த போது சீடன் "குருவே சுயநல அன்பிற்கும் சுயநலமற்ற அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை சிறிது விளக்குங்கள்" என்றான். குளக்கரையில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞனிடம் குரு "தம்பி மீன் என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ? என்றார். அவன் ஆம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். இன்று நான் பிடிக்கும் மீன்கைளை என் மனைவியை சமைத்து தரச்சொல்லி சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கப் போகிறேன் என்று கூறினான். சற்று நேரத்தில் தேவையான மீன்களை பிடித்துவிட்டு அவன் போனதும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் வந்து குளக்கரையில் அமர்ந்தபடி தான் கொண்டுவந்த பொரிகளை எடுத்து நீரீல் தூவினார். ஏராளமான மீன்கள் வந்து பொரியைத் தின்பதை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த அவரிடம் ஜென் குரு பெரியவரே மீன்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ? என்று கேட்டார். ஆம் ஐயா மீன்கள் என்றால் எனக்கு உயிர். அவ்வப்போது இந்த மீன்களுக்கு பொரியைப் போட்டு நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் அந்தப் பெரியவர். ஜென் குரு சீடன் பக்கம் திரும்பி பார்த்தாயா இந்த இருவருக்குமே மீன்க...

இறைவன் எங்கும் உள்ளான் - தமிழ் கதைகள்!

Image
துறவி ஒருவர் இறைவனைப் பார்த்தே தீர வேண்டுமென்று தன்னிடம் அடம் பிடித்த இளைஞன் ஒருவனை "அடர்ந்த  காட்டுக்குள் ஈசன் உள்ளான்; போய்  கண்டு வா" என  காட்டிற்குள்அனுப்பி வைத்தார்.காட்டுக்குள்  சென்ற இளைஞன் அடுத்த நாள் காலையில் மறுபாதை யில் வெளியே வந்தான். அவனிடம் துறவி, "காட்டில் இறைவனைக் கண்டாயா?" என்றார். மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவன் கோபத்துடன் "இல்லை" நீங்க கூறியபடி இறைவன் அங்கில்லை" என்னை ஏமாற்றி விட்டீர்கள்  என்றான். அப்படியா சரி. நீ காட்டிற்குள் போய் மறுபடியும்  வந்தது வரை காட்டுக்குள் என்ன நடந்தது என்று சொல்" என்றார்.  இளைஞன் கூற ஆரம்பித்தார். காட்டுக்குள் சென்ற சிறிது தொலைவி லேயே பலா மா வாழை மரங்களில் பழங்களைப்  பார்த்ததும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது முடிந்தவரை சாப்பிட்டேன். பிறகு கொஞ்ச தூரம் நடந்த போது ஒரு புலி என்னை துரத்த ஆரம்பித்தது. நான் அதனிடமிருந்து தப்பி ஒடும்போது எதிரே ஒரு வேடன் வந்து தனது கவண் கல்லினால் புலியை துரத்தி னான். பிறகு எனக்கு ஓடி வந்தது  களைப்பாக இருந்தது. பிறகு அங்கிருந்து நடந்தபோது ஒரு கோயிலை கண்டேன். ...

சிவபெருமான் திருவிளையாடல் - 10 - திருவண்ணாமலை!

Image
ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்ம தேவரும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். தங்கள் தொழிலையும் மறந்து தர்க்கத்தைத் தொடர்ந்தனர். தர்க்கம் வலுத்தது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றினார். தனது அடி அல்லது முடியைக் கண்டு யார் முதலில் திரும்புகிறார்களோ அவரே சிறந்தவர் என்று கூறினார். இருவரும் ஒப்புக்கொண்டனர். அடியைக் காண பெருமாள் கீழ் நோக்கி செல்ல, முடியைக் காண பிரம்ம தேவர் மேல் நோக்கி சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது, சிவபெருமானின் சிரசில் இருந்து விழுந்த தாளம் பூ, கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. தாளம் பூவைக் கண்ட பிரம்ம தேவர் அதையே ஐயனின் முடியைக் கண்டதாக கருத்தில் கொண்டு திரும்பினார். அதே சமயம் பெருமாளும் திரும்பினார். சிவபெருமானின் அடியைக் காணமுடியாமல் தான் திரும்பிவிட்டதாகக் கூறி தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்ம தேவரோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் உரைத்தார். அவருக்கு தாளம் பூ சாட்சி கூறியது. அனைத்தும் அறிந்த அண்ணல், செய்த தவறுக்கு தண்டனையாக பிர...

எது பண்பு? - தமிழ் கதைகள்!

அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது. ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மகனுக்கும் மகளுக்கும் அம்மாமீது கோபம் வந்தது. அப்பாவும் தன் மனைவியை அதிருப்தியுடன் பார்த்தார். அம்மா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. டயரை மாற்றிய பிறகு பயணம் தொடர்ந்தது. அம்மாவிடம் குழந்தைகள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ‘‘அம்மா, நீங்க ஏன் அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது மரத்தடில இருந்து கிராஸ்வேர்ட் போட்டீங்க. அப்பா பக்கத்துல வந்து நின்னுருக்கலாம்ல!’’ ‘‘அம்மாவுக்கு எப்படி கார் டயரை மாத்துறதுன்னு தெரியாதே!’’ ‘‘எங்களுக்கு மட்டும் தெரியுமா அம்மா? இருந்தாலும் நமக்காக அப்...

இதுவும் க(ட)ரைந்துபோகும்!

“பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?"-ஜமீன்தார். (பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி-அவன் கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு என்று உணர்த்தின சம்பவம்) ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம்.எத்தனையோ பாழடைஞ்ச கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர். எதிர்பாராவிதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார்.தெய்வம் கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர் சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார். அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல முகாமிட்டிருந்தா.அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும், மகாபெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு  உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.வெறும் கையோட வந்திருந்ததுலயே, விரக்தி பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.வழக்கம்போல இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம," ஏதோ கேட்க...

சூரசம்ஹாரம் - நடந்தது என்ன?

சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகனை அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம். இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும். அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும். இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது. அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார். முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரவாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும். தூதை ஏற்காத சூரன், வீரவாகுதேவரை சிறை பிடிக்க முயன்றான். இதையடுத்து வீரவாகு போர் நடத்தினார். 2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவை கொன்றார். 3-வது நாள் அசுரர் க...