ஜென் கதைகள் - உண்மையான அன்பு எது?

ஜென் குருவும் அவரது சீடனும் ஒரு குளக்கரையில்
அமர்ந்திருந்த போது சீடன் "குருவே சுயநல அன்பிற்கும்
சுயநலமற்ற அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை சிறிது
விளக்குங்கள்" என்றான்.

குளக்கரையில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த
இளைஞனிடம் குரு "தம்பி மீன் என்றால் உனக்கு ரொம்பப்
பிடிக்குமோ? என்றார். அவன் ஆம் ஐயா மீன் என்றால் எனக்கு
உயிர். இன்று நான் பிடிக்கும் மீன்கைளை என் மனைவியை சமைத்து தரச்சொல்லி சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கப் போகிறேன் என்று கூறினான். சற்று நேரத்தில் தேவையான
மீன்களை பிடித்துவிட்டு அவன் போனதும் வயது முதிர்ந்த
பெரியவர் ஒருவர் வந்து குளக்கரையில் அமர்ந்தபடி தான்
கொண்டுவந்த பொரிகளை எடுத்து நீரீல் தூவினார். ஏராளமான மீன்கள் வந்து பொரியைத் தின்பதை
மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த அவரிடம் ஜென்
குரு பெரியவரே மீன்கள் என்றால் உங்களுக்கு மிகவும்
பிடிக்குமோ? என்று கேட்டார். ஆம் ஐயா மீன்கள் என்றால்
எனக்கு உயிர். அவ்வப்போது இந்த மீன்களுக்கு பொரியைப்
போட்டு நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் அந்தப் பெரியவர்.

ஜென் குரு சீடன் பக்கம் திரும்பி பார்த்தாயா இந்த இருவருக்குமே மீன்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.
அந்த இளைஞனும் தூண்டிலில் புழுவை வைத்து மீனுக்கு
உணவிடுவது போன்று ஆசைகாட்டி மீன்கைளைப் பிடித்து
தான் சாப்பிட்டு மகிழ்கிறான். இந்தப் பெரியவரோ மீன்களுக்கு பொரி போட்டு அவை சாப்பிடுவதைக் கண்டு மகிழ்கிறார்.

 மீன்கள் மீது அந்த இளைஞன் கொண்ட சுயநலமான அன்பு
அன்பே அல்ல. மீன்கள் மீது இந்தப் பெரியவர் கொண்ட அன்பே
சுயநலமற்றது. அன்பு ஒரு போதும்  பிறருக்குத் தீங்கு செய்யாது என்று விளக்கினார் ஜென் குரு.
 இறைவன் நம் மீது காட்டும் பேரன்பை அதனால்தான் "பெற்ற தாயினும் ஆயின செய்யும்" என்றும் "தாயினும் சாலப் பரிந்து நீ" என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அன்பே சிவம்.
 
அன்பில்லாத தன்மையை நாய் மாதிரி விழுறியே Dog
என்றும் அதே மூன்று எழுத்தை மாற்றிப் போட்டு God என்பதை
தாயைவிட உயர்வாகவும் சொல்லுவதன் காரணம் புரிந்ததா?

Comments