இறைவன் எங்கும் உள்ளான் - தமிழ் கதைகள்!
துறவி ஒருவர் இறைவனைப் பார்த்தே தீர வேண்டுமென்று தன்னிடம் அடம் பிடித்த இளைஞன் ஒருவனை "அடர்ந்த காட்டுக்குள் ஈசன் உள்ளான்; போய் கண்டு வா" என காட்டிற்குள்அனுப்பி வைத்தார்.காட்டுக்குள்
சென்ற இளைஞன் அடுத்த நாள் காலையில் மறுபாதை யில் வெளியே வந்தான். அவனிடம் துறவி, "காட்டில் இறைவனைக்
கண்டாயா?" என்றார். மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவன் கோபத்துடன் "இல்லை" நீங்க கூறியபடி இறைவன் அங்கில்லை" என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்றான். அப்படியா சரி. நீ காட்டிற்குள் போய் மறுபடியும் வந்தது வரை காட்டுக்குள் என்ன நடந்தது என்று சொல்" என்றார்.
இளைஞன் கூற ஆரம்பித்தார். காட்டுக்குள் சென்ற சிறிது தொலைவி லேயே பலா மா வாழை மரங்களில் பழங்களைப்
பார்த்ததும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது முடிந்தவரை சாப்பிட்டேன். பிறகு கொஞ்ச தூரம் நடந்த போது ஒரு புலி என்னை துரத்த ஆரம்பித்தது. நான் அதனிடமிருந்து தப்பி
ஒடும்போது எதிரே ஒரு வேடன் வந்து தனது கவண் கல்லினால் புலியை துரத்தி னான். பிறகு எனக்கு ஓடி வந்தது களைப்பாக இருந்தது. பிறகு அங்கிருந்து நடந்தபோது ஒரு கோயிலை கண்டேன். அங்கே சாப்பாடு இருந்ததால் அதை சாப்பிட்டு விட்டு சோர்வு மிகுதியால் அங்கேயே படுத்து உறங்கி காலையில் எழுந்து காட்டை விட்டு வெளியே வந்தேன். இவ்வளவுதான் நடந்தது. ஆனால் நீங்க கூறியபடி எனக்கு கடவுளே தெரி
யவில்லை என்றான்.
அதை கேட்டு புன்னகைத்த துறவி அந்த இளைஞனிடம்
"மடையா! உன்னைப்போல யாரும் இத்தனை முறை இறைவனை கண்டிருக்க முடியாது." என்றார். இளைஞனுக்கு ஒரே வியப்புடன் எப்படி என்றான். துறவி தொடர்ந்தார். "ஈசனின் ஐந்தொழில் 1.படைத்தல், 2.காத்தல், 3.அழித்தல், 4.மறைத்தல்
5.அருளல் ஆகியவையாகும்.
நீ காட்டுக்குள் சென்றபோது நீ பலவித கனிகளை ருசித்து பசியாற சாப்பிட்டாயே அந்த பழங்களை யார் படைத்தது? அவைகளை ஈசன்தான் படைத்தான். அது ஈசனது ' 'படைத்தல்'தொழில்.
புலி துரத்தியபோது
உன்னை காப்பாற்றிய வேடன் ஈசனே. அது ஈசனின் 'காத்தல்'தொழில்.
புலி உன்னை துரத்தியதும் உனது ஆணவத்தை விட்டு விட்டு காட்டைவிட்டு வெளியேறினால் போதும் எனநினைத்தாய் அல்லவா? அப்போது உனது ஆணவத்தை ஈசன் அழித்தான். அது அழித்தல்
தொழில்.
களைப்பாக இருந்த நீ கோயி லில் இருந்த சாப்பாட்டை உண்டுவிட்டு உறங்கினாய் அல்லவா?
அப்போது உனக்கு உணவு அளித்த ஈசன் அங்குதான் மறைந்திருந்தார். அது மறைத்தல் தொழில்.
இவை அனைத்தையும் என் மூலமாக ஈசனின் தொழிலைப் பற்றி உனக்கு உணர்த்தி இருக்கிறான் அல்லவா? அது அருளல் தொழில்.
ஆகையால் ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ்சோதியான ஈசன் எங்குமாக எதிலுமாக எப்போதுமாக தனது ஐம்பெரும் தொழிலினை செய்து கொண்டே உள்ளான்.
இதை உணர்ந்து எப்போதும் அவனை நினைந்து வணங்கினால் அவனருள் நமக்கு எப்போதும் உண்டு.!
Comments
Post a Comment