Posts

Showing posts from July, 2020

துணிச்சலான சிறுவன் - சிறுகதை

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.அவர்கள் வந்ததும், ” இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.அவனது நண்பர்கள், “ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும...

சகுனி

கம்சபுரம் என்ற ஊரில் சகுனிராசன் என்ற ஒருவன் இருந்தான். படு புத்திசாலியான அவன் அந்நாட்டு அரசனின் ஆலோசகராக இருந்தான். அரசனுக்கு எப்பேர்பட்ட பிரச்னை ஏற்பட்டாலும் சகுனிராசன் அதை எளிதில் தீர்த்து வைப்பான். அதனால் அவனுக்கு கர்வம் அதிகமாக இருந்தது. சகுனிராசனுக்கு மனைவியும் ஒரு மகனும் இருந்தான். மனைவிக்கு பிறந்த ஆறு குழந்தைகள் இறந்துவிட்டனர். ஏழாவதாக பிறந்த மகன்தான் வீரராசா. வீரராசாவை உயிருக்கு உயிராக நேசித்தான் சகுனிராசன். அவன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான். மகன் வளர்ந்து இளைஞன் ஆகிவிட்டான். ஆனால், தந்தையின் புத்திசாலித்தனம் அவனுக்கு இல்லை. அதைக் கண்டு சகுனிராசன் கவலை அடைந்தான். சகுனிராசன் தன் மகனையும் புத்திசாலி ஆக்குவதற்காக கடும் முயற்சி செய்து பார்த்தான். ஆனால், மகனது மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. வீரராசாவுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ஞானமணி, புத்திசாலியாக இருந்தான். தன் மகனை விட நண்பன் புத்திசாலியாக இருப்பது சகுனிராசனுக்கு பிடிக்கவில்லை. வீரராசா கொஞ்ச நேரம் கூட ஞானமணியை பிரிந்து இருக்கமாட்டான். ஞானமணியின் தந்தை ஒரு விவசாயி. வயலில் கடுமையாக உழைப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத...

புது சட்டை - சிறுகதை

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்..” என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம். பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டே பெஞ்சின் மீது ஏறி நின்றான்.பாஸ்கருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி ஏறி நிற்பான்.பாஸ்கர் கொஞ்சம் முரட்டு சுபாவம். மூக்கு நுனியில் கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பையனிடமாவது வம்பு வளப்பான். இப்போது பாஸ்கரின் கோபம் ராஜூவின் மீது இருந்தது.ராஜூ கிளாஸ் லீடர். அவன்தான் இவனைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வகுப்பில் இல்லாத நேரத்தில் அடித்த கொட்டத்திற்கு எப்படி தண்டனை கொடுப்பார்?. பள்ளிக் கூடம் விடட்டும் என்று காத்திருந்தான் பாஸ்கர். வீட்டுக்கு பெல் அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென்று வகுப்பிலிருந்து வெளியேறினர்.பாஸ்கர் மட்டும் ராஜூவின் பின்னாலேயே போனான். ராஜூ பள்ளிக்கூடக் கேட்டைத் தாண்டியதும் அவனைத் தோளைப் பிடித்து இழுத்தான். “டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்னே..?” என்று கோபமாய் கேட்டான். “நான் ஒண்ணுமே………. உன்னப்பத்தி சொல்லலடா….” ...

Little Boy And The Puppy

A farmer had put up a ‘For Sale’ sign on his farm since he wanted to sell a litter of 6 puppies that his dog had delivered. A small boy walked into the farm one morning and asked the farmer if he could buy one of the puppies. The farmer told him that the puppies were of good pedigree and hence would be expensive. The little boy was heartbroken. He held out his hand and the farmer saw that the boy had 50 cents with him.  “I have 50 cents only. Can I at least see the puppies?” the boy asked. ' “Sure”, said the farmer and took the little boy to the rear : end of the barn, letting out a whistle. A huge Labrador jumped out and came running towards the farmer followed by puppies who looked like cute little fur balls. The boy’s face lit up in delight at this sight. But there were only five puppies. As he searched for the last one the boy noticed one puppy, which was slightly smaller, slowly ambling across towards the others. The little boy ran up to the farmer and asked him, “Can I have th...

நயவஞ்சக நரி - சிறுகதை

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது. மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி. அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன. “நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?” என்று கேட்டது ஆண் கழுகு. “கழுகாரா… வாங்க… கூட யாரு? மன்னியா?” என்று கேட்டது. “ஆமாம்!” “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!” என்று கேட்டது. “ஆமாம்…! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்…! ஏன் கேட்கிறீர்?” என்று கேட்டது நரி. “என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!” என்றது ஆண் கழுகு. “ரொம்ப ராசியான மர...

Baked fish

One day a mother was teaching her daughter to bake fish. The mother placed the fish in a baking dish after cutting off the head and the tail. The daughter wanted to know as to why the mother had done that. The mother thought for a few minutes and shook her head. “Don’t ask me for the reason because I don’t have any. I have been taught by my mother to do so and I have always done it like this,” she said. The girl was unhappy because she was not satisfied with the answer.  She decided to go and question her grandmother about it. “Grandma, why do you cutoff the head and tail of the fish before baking?” she asked. “I don’t know dear. My mother always used to do it that way. May be you should ask her about it”, grandma said. So off went the girl in search of her great grandmother to clear her doubts. The daughter asked the old lady the same question. Great Grandma thought for a while and smiled. “I did so because my baking dish was too small to accommodate the full fish”. The daughter burst...

A Kind Gesture!

Once a group of lawyers were riding through the woods. They stopped for a while near a stream, since their horses needed some rest and water. The men also decided to rest. When they resumed their journey after a while they found that one of their team members was missing. They went looking for him and found him at a distance. He was trying to restore two young pigeons that had fallen off from their nest to their mother. He was perched half way up a tree and was gently placing the birds in the safety of their nest. - As he climbed down from the tree the rest of the lawyers teased him about being a very soft hearted person. The gentleman just smiled and said “I am answerable to my conscience. Had I not put them back in the nest with their mother, I wouldn’t have been able to sleep tonight”.

Good vs Extraordinary

A farmer had two sons, Muthu and Raghu. who were both hard-working and efficient. They worked in the family farm and helped the farmer in all the chores. However, the father always gave more responsibility to the younger son Raghu, much to the irritation of the elder son Muthu. Muthu wanted to know the reason and therefore went to his father and asked him. The farmer smiled but did not say anything. Instead he told Muthu to go to Cibi's farm and find out if Cibi had any cows for sale. “We need to improve our stocks.” the farmer said. Muthu came back and said "Yes. . they have six cows which they would like to sell“. “Ok. Find out the price", said the father. Muthu came back and said. "Each cow would cost us Rs. 2.0003. “That’s not a bad price. Ask them if they can deliver the cows tomorrow“ said the father. Muthu makes another trip and returns back saying “Yes. They can deliver them tomorrow“. The father then calls Raghu and asks him to run along to Dev’s fami and find...

பெற்றோர் சொன்னா கேட்கணும்

சிறுகம்பையூர் என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த ஏழை மனிதரிடம் செல்வம் இல்லையென்றாலும் தன் குழந்தைகளை அன்பு காட்டி அரவணைத்து நல்ல வழியில் வளர்த்து ஆளாக்கினார். தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைகளை அழைத்தார். “”குழந்தைகளே… உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக சொத்துக்கள் ஒன்றுமில்லை. என்னிடம் உள்ளதை உங்களுக்கு தருகிறேன். அதை கொண்டு நீங்கள் புத்தியோடு பிழைத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறினார். முதல் மகனுக்கு ஒரு கோழியையும், இரண்டாம் மகனுக்கு அரிவாளையும், மூன்றாம் மகனுக்கு ஒரு பூனையையும் கொடுத்தார். “”மகன்களே இந்த பொருட்களை பார்த்து ஏளனமாக நினைக்கவேண்டாம். இந்த பொருட்களில் உங்கள் தந்தையுடைய ஆசீர்வாதம் இருக்கிறது. என் சொல் பேச்சை கேட்டு நடந்தால் உங்களுக்கு நிறைய பொருட்களை இவை சம்பாதித்து தரும். “”இவற்றை எடுத்து கொண்டு இந்த பொருட்கள் இல்லாத நாடுகளுக்கு சென்று உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தினால் நிச்சயம் பணக்காரனாவீர்கள்,” என்று சொல்லிவிட்டு இறந்தார். தந்தையை இழந்த பிள்ளைகள் மிகவும் வருந்தினர். இறப்பு சடங்குகள் எல்லாம் செய்து முடித்த ப...

Learn From The Eagle

Eagles are known to be endowed with extremely sharp eyesight. Apart from this they also have a strong sense of judging the changes in the weather. They can sense an approaching storm long before it breaks. But it does not hide in safety during the storm. Instead it uses the strong winds that precede the storm to carry itself to safe heights. And how does it do that? It flies high up into the sky and waits for the wind to blow. When the storm breaks out, it allows itself to be lifted up way above the eye of the storm. The eagle is safely above the raging storm. The eagle knows that there is no way it can escape the storm. It simply finds a way to use the power of the winds to steer itself to safety. Likewise in life all of us face ordeals and problems at some point or the other. But instead of running away from the problem it is better to face it and learn a few lessons from the experience. The process might help us tackle impossible situations and come up triumphant.

சீலனின் தந்திரம்!

வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு மன்னன் பர்வதனனின் ஆருயிர் நண்பன். பொக்கிஷத்தில் பணக்குறைவு ஏற்பட்ட போதெல்லாம் மன்னனுக்குத் தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்து பிறகு வாங்கிக் கொள்வான் சீலன். அப்படி கிடைத்த வட்டிப் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவி வந்தான் சீலன். ஓவியக் கலையில் கைதேர்ந்தவன் சீலன். மற்ற கலைகளிலும் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அழகான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், வேலைப்பாடுடன் கூடிய கைவினைப் பொருள்கள் என்றால் என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவான். ஆனால், அப்படி வாங்கும் பொருள்களை யார் கேட்டாலும் கொடுக்கவும் மாட்டான். மன்னன் பர்வதனுக்கு, சீலனின் இந்தப் பிடிவாதக் குணம் ஒன்றுதான் பிடிக்காமல் இருந்தது. அதனால் சீலனிடமிருந்த அழகிய பொருள்களில் ஒன்றைக் கூடப் பெறமுடியாமல் போனது. ஒரு நாள் சீலனைக் காண வாலிபன் ஒருவன் வந்தான். கிழிந்த ஆடைகளை அணிந்து தாடி வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் அவன் உயர் குடியில் பிறந்தவன் என்று சீலனுக்கு தெரிந்துவிட்டது. அவன் அந்த இளைஞனை வரவேற்று உட்காரும் படி சொன்னான். “”ஐயா! என்னை ...

பூதம் சொன்ன கதை!

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,” எனக் கூறினான். “போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,” எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன...

சிறுகதை - மகாத்மா காந்தியின் வாழ்க்கையில்!

காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் ஒரு வாலிபன் அங்கு தங்கி பணிவிடைகள் செய்வதற்காக வந்து சேர்ந்தான்.அந்த வாலிபன் மிகவும் நல்லவன்; ஒழுக்கமானவன். ஆசிரமத்தில் இருந்த அத்தனை குழந்தைகளின் மீதும் அன்பு கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த வாலிபன் ஒரு ஆசிரமச் சிறுமியுடன் சபர்மதி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது கையில், ஒரு எலுமிச்சம்பழம் இருந்தது. அந்த எலுமிச்சம் பழத்தை அந்தச் சிறுமியிடம் துõக்கிப் போட்டு அவள் பிடிப்பதற்குள் அவன் அதைப் பிடித்து, அவள் கையில் எலுமிச்சம்பழம் சிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுமியும் சளைக்காமல் அந்த எலுமிச்சம் பழத்தைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் எலுமிச்சம் பழத்தை நதியில் வீசி எறிவது போல் பாவனை செய்து, எலுமிச்சம் பழத்தை தனது கால்சட்டைப் பையிற்குள் போட்டுக் கொண்டான்.எலுமிச்சம் பழத்தை காணாத சிறுமி விழித்தாள். “”எங்கே பழம்?” என்று கேட்டாள். “”நதிக்குள் எறிந்துவிடடேன்!” என்றான் இளைஞன். “”நான் போய் தேடி எடுத்து வரட்டுமா?” என்று கேட்டாள் சிறுமி. “”அது வீண் வேலை. பழம் கிடைக்காது!” என்றான் வாலிபன...

நாலு பக்கமும்!

ரவி மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். இவன் தந்தை மட்டும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். ரவியைச் சேர்த்து அவர்கள் வீட்டில் நான்கு பேர். தந்தையின் தினக் கூலி அன்றாடம் அவர்கள் வயிற்றுப்பாட்டைக் கழுவவே சரியாக இருந்தது.சமயங்களில் கூலி வேலை கிடைக்காவிட்டாலோ, அன்றைய வேலைக்கு கூலி கிடைக்காவிட்டாலோ அன்று பட்டினிதான் கிடக்க நேரும் அல்லது அக்கம் பக்கத்தினரிடம் அரிசியோ பணமோ கடன் வாங்கித் தான் அன்றைய பாட்டை ஓட்ட வேண்டும். தங்களுக்கு மட்டும் ஏன் இந்த வறுமை? இந்த வறுமையை நீக்க என்ன வழி என்று ரவி யோசிக்காத நாளே இல்லை. ஒரு நாள்— அந்த ஊரில் காமாட்சி பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள். அந்த வழியாக சென்ற ரவி மிகவும் ஏக்கமாக வடைகளை பார்த்தபடியே சென்றான். அவனை பார்த்து இரக்கப்பட்ட பாட்டி, “ரவி இங்க வா. இந்தா வடை சாப்பிடு,” என்றாள். “பாட்டி என்கிட்ட காசு இல்லை. வேணும்னா உனக்கு நான் விறகு பொறுக்கி தரட்டுமா?” என்றான் ரவி. “சரிடாப்பா! இந்தா இந்த வடையைச் சாப்பிடு,” என்றாள் பாட்டி. “ஏண்டா கப்பல் கவுந்த மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்க… என்னாச்சு உனக்கு?” என்றாள் பாட்டி. “பாட்டி எல்லார் வீட்லயும் வசதியா இருக...

விமர்சனம்!

கந்தர்வபுரி என்ற நாட்டை காந்தன் என்ற அரசர் ஆண்டார். அரசர் நல்லவர் என்ற பெயர் பெற்று சிறப்பாக மக்களை ஆண்டார். கவிதைகள் என்றால் அரசருக்கு மிகவும் பிடிக்கும். அரண்மனையில் தினமும் கவியரங்கம் நடைபெறும். அற்புதமான கவிதைகள் எழுதுபவர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிப்பது அரசரின் வழக்கம். அரண்மனையில் ஒரு ஆஸ்தான கவிஞன் இருந்தான். அவன் பெயர் பசுபதி. அற்புதமான கவிதைகள் எழுதுவதில் அவரை யாராலும் வெல்ல முடியாது. திறமை இருக்குமிடத்தில் சில சமயம் கர்வமும் வருவதுண்டு. கொஞ்சம் கர்வம் இருந்தது. கவிதைகள் பாடும் போது ஒருவன் அவைகளை விமர்சனம் செய்வான். அந்த விமர்சகன் பெயர் விமலன். எப்பேர்பட்ட கவிதைகளையும் விமலன் விமர்சனம் செய்து அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து விடுவான். ஆஸ்தான கவிஞனான பசுபதியின் கவிதைகளும் விமலனிடம் இருந்து தப்புவதில்லை. எனவே, பசுபதி கவிதை பாடும் முன் பதட்டத்துடன் விமலனை பார்ப்பான். தனக்கு அபார புலமை இருந்தாலும் மனதுக்குள் விமலனுக்கு பயப்பட்டான். விமலன் நல்லவன். யாருக்கும் தீங்கு செய்யமாட்டான். எனவே, அரசர் அவனிடம் அதிக பற்று வைத்திருந்தார். இவர்களது நட்பு பசுபதியின் அமைதியை கெடுத்தது. அவன...

சிங்கமும் பங்கும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”. அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”. குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசு...

புதுச்செருப்பு!

ஒரு நாள் முல்லா, தான் வாங்கிய புத்தம் புதுக் காலணிகளை அணிந்து பெருமிதத்தோடு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். ஆலமரத்து நிழலில் ஒரு சிறுவர் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் முல்லா அணிந்து வந்த புதிய செருப்புக்களைப் பார்த்து விட்டான். “டேய் நம்ம முல்லாஜி போட்டு வரும் செருப்பைப் பாருங்க எவ்வளவு அழகு” என்றான். அடேங்கப்பா! என்ன பளபளப்பு! அதில் முகம் பார்க்கலாமே. அதோடு ரசம் பூசப்பட்ட கண்ணாடிச் சில்லுகளைப் பதித்து இருக்கின்றனர். அதில் சூரிய ஒளி பட்டுத் தெறித்து வர்ண ஜாலம் காட்டுகிறது பார்,” என்று சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அப்போது ஒரு சிறுவன், “”டேய் இந்தச் செருப்புகளைத் தந்திரமாக அவரிடமிருந்து பறித்துவிட வேண்டும். செய்யலாமா?” என்றான். “”கண்டிப்பாக செய்யலாம்!” என்று எல்லாச் சிறுவர்களும் ஒரே குரலில் ஆமோதித்தனர். இப்படி இவர்கள் திட்டம் போட்டுப் பேசி முடிப்பதற்கும், முல்லா களைப்பு தீர மர நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. “”வாங்க மாமா!” என்று வரவேற்றான் ஒருவன். “”என்னடா? பசங்களா, வரவேற்பு பலமாக இருக்கிறது,” என்றார் ...

சோம்பேறி மனிதன் !

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி மனிதன் இருந்தானாம்.எந்த வேலையும் செய்யாமல் தின்பதும்,தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல்ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம். அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு.சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.எதற்கு?எப்போது வேர்க்குமென்று. அப்போது அவன் மனைவி சொன்னாளாம்’நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்’என்று.அவனும் தன் துணிகளைத் துவைப்பது,தோட்ட வேலை செய்வது,கடைக்குப் போவது,நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம். ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.கொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம்’எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது’என்று. அதற்கு அவர்’உன் வியாதி மருந்தால் தீரவில்லை.சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய்.நான் ...