Posts

Showing posts from September, 2020

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

ஒரு  வீட்டில் வெள்ளாடுகள் பல  வளர்த்து வந்தன.அவைகளோடு ஒரு செம்மறி ஆடும் இருந்தது. செம்மறி ஆடு கொழு கொழுவென்று அழகாக இருந்தது. அதனால் அதன் மீது அந்த ஊர் மக்களுக்கு பிரியம் அதிகம். இதைப்பார்த்த  மற்ற வெள்ளாடுகள் அதன் மீது பொறாமை கொண்டன. இதனால்  செம்மறி ஆட்டை, வெள்ளாடுகள் ஒதுக்கியே  வைத்திருந்தன. அதுமட்டுமின்றி ஆடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைத்தால் உடனே பொறாமைப்பிடித்த  வெள்ளாடுகள், செம்மறி ஆட்டை தண்ணீர் குடிக்க விடாமல் செய்ய முண்டியடித்துக் கொண்டு ஓடும். ஒரு நாள் அந்த வெள்ளாடுகள் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சியை குடிக்க வழக்கப்படியிலான தந்திரத்தோடு முட்டி மோதி ஓடின.செம்மறி ஆட்டையும் முட்டித்தள்ளியப்படி ஓடியதில் கஞ்சித்தொட்டி உடைந்து கஞ்சியெல்லாம் கீழே கொட்டி விட்டன.இதனால் ஆடுகளுக்குள் காயம் ஏற்பட்டதோடு அன்றைக்கு இரவு அத்தனை ஆடுகளும் உணவின்றி பட்டினியாகவே தூங்கின. மறுநாளும் செம்மறி ஆட்டை பழி வாங்க எண்ணிய வெள்ளாடுகள் பழைய பார்முலாவை கையாண்டதால் மறுபடியும் கஞ்சித்தொட்டி உடைந்து அன்றும் பட்டனி. இப்படியே பல நாட்கள் கழிந்தன. சிந்திய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட சா...