புண்ணிய கணக்கு
பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம். எவ்வளவு?. என்று கேட்டார்... 300-ரூபாய் .. 200-ரூபாய்க்கு வருமா ? சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... ஆட்டோ பறந்தது... அண்ணே இந்த வழியா போனா #நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...? #ரோட்டுக்கடைதான் சார் அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம் இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.. ஒரு நடுத்தரவயது அம்மா... அவரது நெற்றிமற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது வாங்க இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார், ஆட்டோ டிரைவர். இட்லி, தோசை, புரோட்டா என கட்டினோம்... எவ்ளோம்மா ?. 60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க 100-ரூபாய் கொடுத்தேன்... மீதியை... சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா... இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க... சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி புறப்பட்ட...