கடவுளா கொக்கா! - தமிழ் கதைகள்

கடவுளோடு பேசிக்கொண்டிருந்த மனிதன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான், 

`சாமி உங்களுக்கு ஒரு கோடி வருஷங்கறது  எவ்வளவு நேரம்?' 

அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே, 
'ஒரு கோடி வருஷங்கிறது எனக்கு ஒரு நிமிஷம்' என்றாராம். 

இதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன், 'அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி?'என்று கேட்க,

'ஒரு ரூபாய் போல' என்றாராம் கடவுள். 

உடனே கடவுளை மடக்க நினைத்த மனிதன், 

'சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்' என்றானாம் ரொம்ப அடக்கமாக ..

கடவுள் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, 

'ஒரு நிமிஷம் பொறு'...!என்றாராம்.

Comments