Posts

Showing posts from October, 2020

ஆசையும் பேராசையும்!

''ஆசை'' (Desire) என்பது தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும்... பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ''பேராசை( Greed.)..! அளவில்லாத ''பேராசை'' நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப் போக்கில் நிறைவேறாமல் போகாது... ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு...? என்று கேட்டார். ஆசை என்றால் என்ன...? பேராசை என்றால் என்ன...? என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை தங்கள் வீட்டுக் சுற்றுச்சுவரை சுற்றி வரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார்... ஆனாலும்!, அந்த நாய் கதவில் தெரிந்த இடுக்கின் வழியே, வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக்கொள்ளும்... அப்படிப் பேசும்போது ஒருநாள் தெருநாய் சொல்லிற்று, "தினமும் இவர்கள் போடும் ரொட்டித் துண்டையே உண்கிறாயே, உனக்கு சலிக்கவில்லையா...? என்றது... என்னைப்பார் தினமும் குப்பைத் தொட்டிகளில் வித விதமான உணவைச...

ஜென் தத்துவ கதை

முடிந்து போனதை நினைவில் கொள்ளாதே:ஜென் குரு ஒருழர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் முன்பு சீடர்கள் அமைதி காத்து அமர்ந்திருந்தனர். அப்போது மரத்திலிருந்து முதிர்ந்த சருகு ஒன்று உதிர்ந்து அவர் மடியில் விழுந்தது. குரு கண் விழித்தார். சருகை கையில் எடுத்தார்.சீடர்களை உற்று நோக்கினார். சருகை கையிலெடுத்து மீண்டும்  மரத்தில் ஒட்ட வைக்க முயற்சி செய்தார். சீடர்கள்,"குருவே என்ன செய்கிறீர்கள்? என வினவினார்கள். குரு சிரித்தார். சருகை சீடர்களுக்கு காட்டி, "இது பசுமையாய் இருந்த போது நமக்கு நிழல் கொடுத்தது.சிறு கிளைக்கு அழகைக் கொடுத்தது.இப்போதோ,உதிர்ந்து விட்டது.நன்றி விசுவாசம் வேண்டாமா?எனவே தான் இந்த உதிர்ந்த சருகை மீண்டும் மரத்தில் ஒட்டவைக்கிறேன்" என்றார். சீடர்கள் குழப்பமுற்றனர். மீண்டும் குரு சிரித்தார். சிரிப்பு என்பது புரிதலுக்கான குறியீடு அல்லவா? "முடிந்து போன,பழைய விஷயங்களை பற்றி கவலை கொள்ளாதே.அவை நடந்து முடிந்து விட்டவை. மீண்டும் மனதில் பதியவைக்க  முயற்சி செய்யாதே.அப்படி முயற்சித்தால் மனதில் வீண் குழப்பங்கள் தான்  மட்டுமே "என்றார் குரு. "முடிந்து போன விஷய...