ஆசையும் பேராசையும்!
''ஆசை'' (Desire) என்பது தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும்... பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ''பேராசை( Greed.)..! அளவில்லாத ''பேராசை'' நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப் போக்கில் நிறைவேறாமல் போகாது... ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு...? என்று கேட்டார். ஆசை என்றால் என்ன...? பேராசை என்றால் என்ன...? என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை தங்கள் வீட்டுக் சுற்றுச்சுவரை சுற்றி வரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார்... ஆனாலும்!, அந்த நாய் கதவில் தெரிந்த இடுக்கின் வழியே, வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக்கொள்ளும்... அப்படிப் பேசும்போது ஒருநாள் தெருநாய் சொல்லிற்று, "தினமும் இவர்கள் போடும் ரொட்டித் துண்டையே உண்கிறாயே, உனக்கு சலிக்கவில்லையா...? என்றது... என்னைப்பார் தினமும் குப்பைத் தொட்டிகளில் வித விதமான உணவைச...