ஜென் தத்துவ கதை
முடிந்து போனதை நினைவில் கொள்ளாதே:ஜென்
குரு ஒருழர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார்.
அவர் முன்பு சீடர்கள் அமைதி காத்து அமர்ந்திருந்தனர்.
அப்போது மரத்திலிருந்து முதிர்ந்த சருகு ஒன்று உதிர்ந்து அவர் மடியில் விழுந்தது.
குரு கண் விழித்தார்.
சருகை கையில் எடுத்தார்.சீடர்களை உற்று நோக்கினார்.
சருகை கையிலெடுத்து மீண்டும் மரத்தில் ஒட்ட வைக்க முயற்சி செய்தார்.
சீடர்கள்,"குருவே என்ன செய்கிறீர்கள்? என வினவினார்கள்.
குரு சிரித்தார்.
சருகை சீடர்களுக்கு காட்டி,
"இது பசுமையாய் இருந்த போது நமக்கு நிழல் கொடுத்தது.சிறு கிளைக்கு அழகைக் கொடுத்தது.இப்போதோ,உதிர்ந்து விட்டது.நன்றி விசுவாசம் வேண்டாமா?எனவே தான் இந்த உதிர்ந்த சருகை மீண்டும் மரத்தில் ஒட்டவைக்கிறேன்" என்றார்.
சீடர்கள் குழப்பமுற்றனர்.
மீண்டும் குரு சிரித்தார்.
சிரிப்பு என்பது புரிதலுக்கான குறியீடு அல்லவா?
"முடிந்து போன,பழைய விஷயங்களை பற்றி கவலை கொள்ளாதே.அவை நடந்து முடிந்து விட்டவை. மீண்டும் மனதில் பதியவைக்க முயற்சி செய்யாதே.அப்படி முயற்சித்தால் மனதில் வீண் குழப்பங்கள் தான் மட்டுமே "என்றார் குரு.
"முடிந்து போன விஷயங்களைப் பற்றி பிரக்ஞையற்று இரு " என்கிறது ஜென்.
ஆம் நண்பர்களே.
நடந்தது நல்லபடியாக நடந்தது என்று அமைதி கொள்.அலட்டிக்கொள்ள வேண்டாம்.இனி நடக்க போவது குறித்தும் கவலை வேண்டாம்.அதுவே நடக்கும்.
Comments
Post a Comment