கொக்கும் பாம்பும் - பஞ்ச தந்திரக் கதைகள்!
ஒரு கானகத்தில் ஒரு கொக்கு தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வந்தது. அப்போது அதன் வசிப்பிடம் அருகில் வசித்து வந்த பாம்பு ஒன்று கொக்கு இடும் முட்டைகளை திருடி உண்டு வந்தது. இதனால் மனம் வருந்தி கிடந்தது கொக்கு,
அதனால் அதனுடைய நண்பனான நண்டு ஒன்றிடம் தன்னுடைய கவலையை பகிர்ந்து கொண்டது. நண்டு கொக்கிற்கு ஒரு உபாயம் கூறியது.
ஒரு கீரி வளையில் இருந்து பாம்பு பொந்து வரை வழியெங்கும் மீன்களை பிடித்து போட்டு வைக்க சொன்னது. கொக்கும் அவ்வாறே மீன்களை பிடித்து போட்டு வைத்துக் கொண்டே வந்தது.
கீரி ஒவ்வொரு மீன்களாக தின்றபடி பாம்பு பொந்திற்கு வந்து சேர்நதது. அங்கே பாம்பை கண்டதும் சண்டையிட்டு பாம்பை கொன்றபின் தன்னுடைய இருப்பிடம் திரும்பியது.
நண்டின் அறிவுரையால் கொக்கு பாம்பின் தொந்தரவு இல்லாமல் நீண்ட காலம் சந்தோஷமாக பிள்ளைகளுடன் வாழ்ந்தது.
நீதி : எல்லா விஷயத்துக்கும் தீர்வை நாமே தேடுவதை விட சிறந்த நண்பர்களிடமும் அறிவுரை கேட்பது நன்மையில் முடியும்.
Comments
Post a Comment