காகமும் நாகமும் - பஞ்ச தந்திரக் கதைகள்!

ஒரு ஊரில் ஒரு காக்கை தம்பதியினர் மிகுந்த காதலோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் காதலால் பலமுட்டைகள் இட்டு அதனை பாதுகாத்து வந்தனர். அப்போது அந்த காகங்கள் வாழும் மரத்தின் கீழ் உள்ள பொந்தில் உள்ள கருநாகம் காக்கைகள் இடும் முட்டைகளை காகங்கள் அறியாமல் எடுத்து தன்னுடைய பசியை ஆற்றிகொண்டிருந்தது.

இதனால் மனம் வருந்திய காகம் அங்கு வந்த நரியிடம் இதுபற்றி கூறி புலம்பியது.

நாகத்தின் பசியில் இருந்து காகத்தின் முட்டைகளை தப்பிக்க வைக்க நரி ஒரு உபாயம் கூறியது.

மறுநாள் விடியல் பொழுதில் அரண்மனைக்குள் பறந்தது காகம். அங்கே ராணி தன்னுடைய ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டு குளித்து கொண்டிருந்தாள். அழகான முத்துக்கள் பதித்த ஆபரணம் ஒன்றை தனது அலகால் கவ்விய காகம் அதை தூக்கி கொண்டு பறந்தது. ராணி அலறி வீரர்களை அழைத்து காகத்தை பின் தொடர சொன்னாள் .காகம் அந்த நகையினை நாகம் இருந்த பொந்தில் கொண்டு வந்து போட்டுவிட்டு வேறொரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.

வீரர்கள்மாலையைஎடுக்கபொந்திற்குள்கைவிட்டபோதுஅங்கிருந்தகருநாகம்சீறியது. நாகத்தை கண்ட வீரர்கள் அதனை தங்கள் வாளால் வெட்டி கொன்றனர். அதன் பின்னர் ராணியின் முத்துமாலையை எடுத்து சென்று ராணியிடம் ஒப்படைத்தனர்.

நரியின் யோசனைப்படி செய்த காகம் நாகத்தின் தொல்லையில் இருந்து விடுபட்டு தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் பல்லாண்டுகாலம் நிம்மதியாக வாழ்ந்தது.

நீதி : அடுத்தவருக்கு கெடுதல்செய்ய நினைப்பவருக்கு அதை போல பல மடங்கு கெடுதல் திரும்ப அவர்களை வந்து சேரும்.

Comments