பைரவர் அவதாரம்
பைரவர் அவதாரம் பற்றி சொல்லும் புராண கதைகள்.
ஒரு காலத்தில் சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதேபோன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் உண்டு.
இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. உடனே அவர் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் தன்னையே வணங்க வேண்டும் என ஆணவத்துடன் கூறினார்.
இதனால் மனம் வருந்திய தேவர்கள் சிவனை தரிசித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க பரமேஸ்வரன் தனது உடம்பில் இருந்து பைரவரை தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி எடுத்து தன் கைகளில் ஏந்தினார். இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அதைப்போக்க கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றி சென்றார்.
காசியில் அவர் நுழைந்து அன்னபூரணி கையால் உணவு வாங்கி உண்டதும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அங்கேயே இருந்து காசியை பாதுகாக்கும் காவலராக அருள்புரிந்து வருகிறார்.
தட்சன் யாகம் நடத்தியபோது சிவனை அழைக்காமல் அவமதித்தான். இதையடுத்து தட்சனின் மகளான பார்வதிதேவி, அவன் நடத்திய யாக குண்டத்தில் விழுந்து உயிர்விட்டாள். இதையடுத்து ஈசன், தாட்சாயணியின் உடலை கைகளில் ஏந்திய படி ஆவேசத்துடன் அங்கும், இங்கும் அலைந்தார்.அப்போது மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கினார். அது பூமியில் பல இடங்களில் விழுந்தது. ஒவ்வொரு இடமும் சக்திப் பீடங்களாயின. அவற்றுக்கு பைரவரே பாதுகாவலராக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒரு சமயம் அந்தாகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவன் பைரவரை தோற்றுவித்ததாகவும், அவர் விஸ்வரூபம்டுத்து அறுபத்து நான்கு வடிவில் அரக்கர்களை அழித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது. இப்படி பைரவர் அவதாரங்கள் பற்றி பல புராண கதைகள் உள்ளன.!

Comments
Post a Comment