நீங்க கடவுளா? - தமிழ் கதைகள்

நீங்க கடவுளா..?

------------------------

கெளதமர் எந்த ஊருக்கு சென்றாலும் மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து அவரை வணங்குவார்கள். ஒரு நாள் அவர் ஓர் கிராமத்தை கடந்து சென்ற போது, ஒருவன் திடீரென்று கெளதமர் முன்னால் வந்து நின்று,

"நீங்க கடவுளா..?’"என்றான்.

"இல்லை..!" என்றார் புத்தர்.

" நீங்க கடவுளோட அவதாரமா.., தேவ தூதுவரா..?

"இல்லை..!"

எங்களைக் காப்பாத்தறதுக்காக வானுலகத்தில இருந்து இங்கே வந்தவரா..?"

"இல்லை...!"

"ஆக, நீங்கள் கடவுளும் இல்லை, அவரோட அவதாரமும் இல்லை, மேல் உலகத்திலிருந்து வந்த தேவரும் இல்லை.., அப்புறம் ஏன் மக்கள் உங்களை வணங்குறார்கள்..? நீங்களும் எங்களைமாதிரி ஒரு சாதாரண மனுஷன்தானே..? உங்ககிட்ட என்ன விசேஷம்..? என்ன வித்தியாசம்..?"

புத்தர் பெருமான் இரண்டே சொற்களில் அவனுக்குப் பதில் சொன்னார்.

"நான் விழித்துவிட்டேன்..!"

அவ்வாறு கூறிவிட்டு, தனது பயனத்தை தொடர்ந்தார்.

ஆம்..., ஞானம் என்பதே அறியாமையில் இருந்து விழித்து கொள்வதே ஆகும்.

Comments