ஸ்ரீவிஷ்ணு திருவிளையாடல் - 2 - நஞ்சீயர்

நஞ்சீயர் என்ற ஒரு பரம பாகவதோத்தமர்.
அவர் தனக்குக் கிடைத்த ஒரு கழஞ்சு பொன்னைக் கொண்டு, தாம் தினமும் திருவாராதனம் செய்யும் ஸ்ரீ. நர்த்தன( வெண்ணைக்காடும் பிள்ளை)  க்ருஷ்ணனுக்கு அழகான ஒரு சதங்கை செய்து அவன் திருவடிகளில் அதை அணிவித்து, அந்த நர்த்தனக் கண்ணனுக்கு' சதங்கை அழகியார்' என்ற பெயரிட்டு மகிழ்ந்திருந்தார்.

சில தினங்கள் சென்றதும் ஒரு நாள் அதிகாலை ஸ்ரீ.நஞ்சீயரின் வீட்டுக் கதவு படபடவென்று தட்டப் பட்டது. கதவைத் திறந்து பார்த்தால் இவருடைய இல்லத்திற்கு ஒரு பத்து வீடுகள் தள்ளி இருக்கும் இல்லத்தில் வசித்து வரும் மனிதர் அங்கு நின்றிருந்தார்.அவர் சொன்னார்

' நேற்று இரவு என் கனவில் ஒரு அழகான குழந்தை வந்து ' எனக்கு நிறைய நாவல் பழங்கள் வேண்டும்.கொடு...... என்று என்னைப் பாடாய் படுத்தினான்.நான் அவனிடம் நீ யார்? எங்கிருக்கிறாய்? உன் பெயர் என்ன? என்று கேட்டபோது ' உங்கள் வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளி வசிக்கிறாரே.... நஞ்சீயர்! நான் அவர் வீட்டில் தான் இருக்கிறேன்.என் பெயர்' சதங்கை அழகியார்' என்று சொன்னான். 

அந்தச் சிறுவன் தங்கள் இல்லத்தில் தான் இருக்கிறானா? என்று அவர் நஞ்சீயரிடம் கேட்ட மறு கணம், நஞ்சீயர் ' ஹே! பரந்தாமா! ஆயிரமாயிரம் திருநாமங்கள் உனக்கு இருந்தும், நான் ஆசையாக உனக்கிட்ட பெயரை இந்த உலகதுக்கு எடுத்துக் காண்பிக்க இப்படித் திருவருள் புரிந்தனையா' என்று உணர்ச்சிப் பெருக்கில் மயங்கி சரிந்தாராம்.

எளியோர்க்கு எளியோனான பரந்தாமனின் வாத்சல்யத்துக்குத் தான் எல்லை ஏது?!

Comments