விக்கிரமாதித்தன் கதைகள் -2

விக்கிரமாதித்தன் கதைகள் -2

உஜ்ஜயினி நகரம் போஜராஜனின் மேலான ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிந்து சுபிட்சமாக இருந்து வந்தது. கம்பராமாயணத்தில் சொன்னதுபோல மகிழ்ச்சியாக இருந்தனர்.
வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்.(கம்பராமாயணம்)

கோசல நாட்டில் வறுமை இல்லாததால் கொடைக்கு இடமில்லை! நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை வெளிப்படுத்த முடியவில்லை! பொய்மொழி இல்லாமையால் உண்மை தனித்து விளங்கவில்லை. கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அறியாமை இல்லை.

உஜ்ஜயினியும் அது போல விளங்கிற்று. ஏறக்குறைய சொர்க்கம்!

போஜராஜனும் அவனுடைய அமைச்சரான நீதிவாக்கியரும் மக்கள் நலனில் அக்கறையுடன் இருந்தனர். பக்கத்து வனத்தில் உள்ள விலங்குகள் நாட்டின் எல்லையில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தருவதொன்றே அங்கு அவ்வப்போது நிலவும் பிரச்சினை.

விலங்குகளால் ஏற்படும் தொல்லைகளை அறிந்த போஜராஜன் தன் அமைச்சர் நீதி வாக்கியருடனும் படைகளுடனும் நாட்டின் எல்லையை  ஒட்டிய காட்டினுள் புகுந்தான். கொடிய விலங்குகளை வேட்டையாடித் தீர்த்தான். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டமெல்லாம் அப்போது கிடையாது! வேட்டையில் நல்ல தேட்டை! உச்சிவெயில்! ஓடிக்களைத்த வீரர்கள் ஓய்வை விரும்பினர். வேட்டையாடியபடி இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை! அனைவரும் சோர்வுடன் வீடு திரும்பத் தொடங்கினர்.

திரும்பும் வழியில் நிழல் தரும், கனிதரும் மரங்கள் சூழ்ந்த கம்பங் கொல்லை ஒன்று தென்பட்டது. அதன் உரிமையாளன் சரவணபட்டர் என்ற அந்தணன். அவன் விளைந்திருந்த கம்பங் கொல்லையைக் காவல் காக்கும் பொருட்டு ஓர் உயரமான மரத்தின் மேல் பரண் அமைத்து வேடிக்கை பார்த்தவாறு இருந்தான். போஜராஜனையும் அவனது களைத்த வீரர்களையும் கண்டான். அவர்களது களைப்பான தோற்றத்தைக் கண்டு இரக்கம் கொண்டான்.

பரண் மேலிருந்து உரத்த குரலில் அவர்களை நோக்கி, "போஜராஜனே! படை வீரர்களே! வேட்டையாடிக் களைத்துப் போன முகங்களுடன் காணப்படுகிறீர்கள்! அனைவரும் உள்ளே வாருங்கள்! இங்குள்ள கிணற்றில் நீர் இறைத்து உங்கள் தாகத்தைத் தனித்துக் கொள்ளுங்கள்! கம்பங் கொல்லைகளில் உள்ள முற்றிய கதிர்களைப் பிய்த்து உண்ணுங்கள். சுவையான கனிகளைப் பறித்து உண்ணுங்கள். " என்று அழைத்தான்.

போஜராஜன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அனைவருடனும் உள்ளே நுழைந்து உண்ணத் தொடங்கினான்.

அனைவரும் மனநிறைவுடன் தின்று கொண்டிருந்த வேளையில் பரண் மேலிருந்த சரவணபட்டர் கீழே இறங்கி வந்தான்.!

Comments