ஜென் கதைகள் -1 - தமிழ் கதைகள்
ஜென் கதைகள் -1
நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான
ஜென் ஞானிகளில் ஒருவர்.
ஒரு பேராசிரியர், தத்துவ பேராசிரியர் அவரைக் காண வந்தார்.
நான்சேன் ஒரு சிறிய குன்றின் மேல் வசித்துவந்தார். அவர் மலைஏறி வந்ததால்
மிகவும் வியர்த்து களைத்து வந்தார். அவர் நான்சேனின் குடிசைக்குள் நுழைந்த உடனேயே
உண்மை என்பது என்ன எனக் கேட்டார்
நான்சேன், உண்மை கொஞ்ச நேரம்
காத்திருக்கலாம், அதற்கு அவசரமில்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கோப்பை
டீதான். நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள் எனக் கூறி விட்டு டீ தயார் செய்ய
சென்றார்.
நான்சேன் உள்ளே சென்று டீ
தயாரித்துக் கொண்டு வெளியே வந்தார்.
கோப்பையை விரிவுரையாளரின் கைகளில் கொடுத்தார்,
கெட்டிலில் இருந்து டீயை ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிறைந்துவிட்டது.
அந்த வினாடி
வரை வந்தவர் பொறுத்திருந்தார், ஏனெனில் அதுவரை எல்லாமே சாதாரணமாகதான் நடந்தது, ஒரு
களைப்பான மனிதனுக்காக இரக்கப்பட்டு டீ தயாரித்துக் கொண்டு வந்தார். அது
அப்படித்தான் இருக்கும். நீ கோப்பையில் டீயை ஊற்றுகிறாய் – அதுவும் சரிதான், ஆனால்
பின்தான் அசாதாரணமானது நடந்தது.
நான்சேன் ஊற்றிக் கொண்டே
இருந்தார். கோப்பை நிறைந்து வழிந்தது. இப்போது விரிவுரையாளர் சிறிது
ஆச்சரியமடைந்தார். இவர் என்ன செய்கிறார், இவருகென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா,
ஆனாலும் பொறுத்தார் – அவர் மிகவும் நாகரீகமடைந்த மனிதர், இது போன்ற சிறிய
விஷயங்களை ஒரளவுக்கு தாங்கிக் கொள்ள முடியும். ஒரு சிறிதளவு
பைத்தியக்காரத்தனத்தை….. ஆனால் கோப்பையின் கீழே இருந்த தட்டும் நிறைந்து
வழிந்தது, நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார்.
இது மிகவும் அதிகம். இப்போது
ஏதாவது செய்தாக வேண்டும், எதையாவது சொல்லியாக வேண்டும், வந்தவர் நிறுத்துங்கள் என
கத்தினார். ஏனெனில் இப்போது டீ தரையில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறீர்கள், கோப்பை இனிமேலும் கொள்ளாது. இதைக்கூட உங்களால்
பார்க்க முடியவில்லையா, உங்களுக்கு என்ன பயித்தியமா எனக் கேட்டார்.
நான்சேன் சிரித்துக் கொண்டே,
இதைதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்குகென்ன பயித்தியமா கோப்பை
நிறைந்து விட்டது அதில் இன்னும் கொஞ்சம்கூட ஊற்ற முடியாது என்பதை பார்க்க
முடிகின்ற உங்களால்
உங்களது மனம் நிறைந்து வழிகிறது அதில் சிறிதளவுகூட உண்மை ஏறாது
என்பதை ஏன் பார்க்க முடியவில்லை.
இந்த டீயைப் போலவே உங்களது மனதிலிருந்து
நிறைந்து வழியும் தத்துவம் என் குடிசை முழுவதும் பரவி இருப்பதை உங்களால் பார்க்க
முடிகிறதா என்று கூறினார்.
வெற்றுக் கோப்பையிலே தான் தேனீரை ஊற்ற முடியும்.
வெற்று (empty) மனதாலே உண்மையை உள்வாங்க முடியும்.

Comments
Post a Comment