16வது திவ்யதேசம் - திருக்கண்ணமங்கை
108 திவ்ய தேசங்களில் 16வது திவ்யதேசம்
பக்தவத்சலப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை
, தமிழ்நாட்டில்திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்..மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை பெயர்புராண பெயர்(கள்):லட்சுமி வனம், ஸப்தாம்ருத ஷேத்ரம்பெயர்:பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை அமைவிடம்ஊர்:திருக்கண்ணமங்கைமாவட்டம்:திருவாரூர்மாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் (விஷ்ணுநின்றகோலம்,பிரமாண்ட திருவுருவம்)உற்சவர்:பெரும் புறக் கடல்தாயார்:கண்ணமங்கை நாயகிஉற்சவர் தாயார்:அபிஷேகவல்லிதீர்த்தம்:தர்சன புஷ்கரணிமங்களாசாசனம்பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டடக்கலைவிமானம்:உட்பல (உத்பல) விமானம்கல்வெட்டுகள்:உண்டு
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.
திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.
பாத்ம புராணம் 5வது காண்டத்தில் 81 முதல் 87 முடிய உள்ள 7 அத்தியாயங்களில் இத்திருத்தலம் குறித்து கூறப்படுகின்றது.
மூலவரின் ஒரு பெயரான பத்தராவி (பக்தர்+ஆவி) என்பது பக்தர்களுக்கு வேகமாக வந்து அருளுவதால் அமைந்தது.
இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தினை, பாடியுள்ளனர்.
பஞ்சகிருஷ்ண தலங்கள் மிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம் ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.
கோவில்அமைவிடம்லோகநாதப் பெருமாள் கோவில்திருக்கண்ணங்குடிகஜேந்திரவரதர் கோவில்கபிஸ்தலம்நீலமேகப்பெருமாள் கோவில்திருக்கண்ணபுரம்பக்தவக்ஷலப்பெருமாள் கோவில்திருக்கண்ணமங்கைஉலகளந்தபெருமாள் கோவில்திருக்கோவிலூர்
சப்தமிர்த தலம்
இத்தலத்தில்,
விமானம்
மண்டபம்
வனம்
ஆறு
கோவில் அமைவிடம்
ஊர்
புஷ்கரணி
ஆகிய ஏழும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் சிறப்பைக் கொண்டமைந்துள்ளதால், இத்தலம் சப்தமிர்த தலம் என அழைக்கப்படுகிறது.
ஓம் நமோ நாராயணா!
Comments
Post a Comment